Tuesday, 4 June 2013

இடுமருந்து | idumarunthu

                                           
                                             
                                         
                           MUDHASANA HERBALS
                   Treatment for mind. body. and soul                                                         ________________________________________________________                    
             102/3 Maruthy complex, PeriaNaiken Palayam, Coimbatore.20
ph.8667879411..                                                             whatsapp: 8098409001
                                       email: mudhasana.cbe@gmail.com                 _________________________________________________________   
                                  


               

                   
               
 கடந்த 2006 முதல் தமிழ் நாடு முழுவதும் உள்ள 30க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள்,     15 குறி சொல்லும் சாமியாடிகள், 10க்கும் மேற்பட்ட மாந்த்ரீகர்கள், 6 குடுகுடுப்பை                     காரர்கள், 2 பிரபலமான மனோதத்துவ நிபுனர்கள்ஆகியோரை நேரிடையாக சந்தித்து  பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த ப்ளாக் உருவாக்கப்பட்டுள்ளது.                           
2009ம் ஆண்டு  செப்டெம்பர் மாதம் பெங்களூரில் நடை பெற்ற அகில இந்திய மருத்துவர்கள் மாநாட்டில் uses and effects of indian toxical plants என்ற தலைப்பிலும் , 2010                   பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற  ஆன்மீக அறிவியல் பேரவை கூட்டத்தில்               மந்திரமா மருத்துவமா என்ற தலைப்பிலும் சமர்ப்பிக்கப்பட்ட  எனது ஆய்வு                                    கட்டுரைகளின் அடிப்படையிலும் இந்த ப்ளாக் உருவாக்கப்பட்டுள்ளது.                                                 
எனது ஆராய்ச்சிகளை அங்கீகரிக்கும் வகையில் 2011 தமிழ் புத்தாண்டு மலரில் அவள்                 விகடன் பத்திரிக்கையும்,2011 ஜனவரி 9ம் தேதி தினமலர் மற்றும் காலை கதிர்                                   பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டுள்ளன .                                                                                                          
                                                                                    Dr.G. முகுந்தன்.BMHS.DYNT,                        
                     இடுமருந்து. . . . . .
         எனப்படும்  ஹெர்பல் டாக்ஸிகாலஜி.


இடுமருந்து என்பது ஜோதிட பாஷையில் விஷ போஜனம் என்று சொல்லப்படுகிறது.செய்வினை... மருந்துவைத்தல்..கைமருந்து என்று பல பெயர்களில் சொல்லப்படும் இந்த கறுப்பு வித்தையால் தீராத உடல் பாதிப்புகளையும் மனபாதிப்புகளையும் ஏற்படுத்தமுடியும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர்.

பொதுவாக நீண்ட நாட்களாக நோயினால் ஆவதிப்படுபவர்கள் மருத்துவ சிகிசைகள் பயனளிக்காத சுழ்நிலையில் தங்களுக்கு யாரோ மருந்து வைத்துவிட்டார்கள் என்று சொல்வதை பல சந்தர்ப்பங்களில் நாம் கேட்டிருக்கிறோம்.உண்மையில் மருந்து வைத்து ஒருவரின் உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்தமுடியுமா இடுமருந்தால் தீராத நோய்களை உறுவாக்க முடியுமா என்பது நிறைய பேரின் சந்தேகமாக இருக்கிறது... 

இடுமருந்து என்ற விஷபோஜனம் நடைமுறையில் மிகமிக சாத்தியமான ஒன்று. மாந்த்ரீக சாஸ்திரம்...குட்டிசாத்தான் வேலை...யட்சிணி உபகர்மம் என்றெல்லாம் மிகைபடுத்தி சொல்லப்பட்டாலும் இடுமருந்து என்பது விஷதன்மை வாய்ந்த மூலிகைகளை உண்ண கொடுத்து அதன் மூலம் உடல் மற்றும் மன பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும்.
இதில் மந்திரமோ..அமானுஷ்யமோ...தெய்வதன்மையோ...மனித சக்திக்கு அப்பாற்பட்ட விஷயமோ எதுவும் இல்லை. இவை அனைத்தும் மிகமிக புத்திசாலிதனமாக கையாளப்படும் சாதாரண ஸ்லோ பாய்ஸன் ரக பாதிப்புகளே.


இயற்கை தாவரங்களில் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள் இருப்பதை போலவே விஷத்தன்மை வாய்ந்த நச்சு தாவரங்களும் நிறைய உள்ளன. உதாரணமாக அரளி விதையை தின்றால் உயிர் போகும் என்பதும்..ஊமத்தை விதையை தின்றால் மூளை பாதிப்பு ஏற்படும் என்பதும் சாதாரண கிராமத்து மக்களுக்கு தெரியும். புகையிலை, கஞ்சா, அபின் போன்றவை உளவெறியூட்டும் போதையை தரும் தாவரகள் என்பதும். கள்ளிசெடி.ஊமத்தை செடி, பார்தீனியம் ஆகியவை மனிதனுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை என்றும் நடைமுறையில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

அதேபோல உடல் பாதிப்பை ஏற்படுத்தும் நூற்றுக்கணக்கன தாவரங்கள் உள்ளன.தலை சுருளி..கற்றாமரை....ஆடை ஓட்டி..நீர்மேல் நெருப்பு.. பின்துடரி.. குன்றிமணி.. பொற்றிலை.. உரோம வேங்கை..பொற்றாலை கரிப்பான்.. செங்கழுநீர்.. கர்ன்செம்பை.. மரக்குறும்பை.. கோழிக்கொல்லி.. காட்டுசிகை..அழிஞ்சில்..சீமைகாடைகண்ணி..குன்றிமணி..இசப்புகோல்விதை..போன்றவை விஷத்தன்மை வாய்ந்த சிலவகை மூலிகைகளாகும். இவ்வறு சுமார் 185 வித மூலிகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 90 வகை மூலிகைகள் தமிழகத்தின் கொல்லிமலை பகுதியில் மட்டுமே கிடைக்கின்றன இதனால்தான் பெரும்பாலான ஜோதிடர்கள், மாந்த்ரீகர்கள், குறிசொல்பவர்கள் கொல்லிமலை பகுதியில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

இத்தகைய மூலிகைகளில் உள்ள நச்சுதன்மை உடல் திரவங்களையும் உடல்  உள்ளுறுப்புகளையும் பெரிய அளவில் பாதிக்கும் தன்மையுடையவை. உதாரணமாக குன்றிமணியில் உள்ள ஆப்ரின் விஷமும்,  இசப்பு கோல்விதையில் உள்ள ரைசின் விஷமும்..ஊமத்தை விதையிலுள்ள டெக்ஸ ஆல்பமின் விஷமும்..அரளி கள்ளி மந்தாரையிலுள்ள தெவெற்றியா A விஷமும்..ஆடைஒட்டி உரோம வேங்கையிலுள்ள அம்ப்ரோசின் விஷமும்..காக்கை கொல்லியில் உள்ள ரே டாஸின் விஷமும்.. பொன் ஊமத்தை,நீல கதிரியில் உள்ள அட்ரோப்பின் விஷமும், மரக்குறும்பை, கழஞ்சு ஆகியவற்றில் உள்ள மோர்பின் விஷமும்..தலைசுருளி, கற்றாமரை ஆகியவற்றில் உள்ள குராரி விஷமும்..நீர் சிலும்பை, நீர்பாசி,நீர்மேல் நெருப்பு ஆகியவற்றில் உள்ள ஆர்சனிக் விஷமும் உடல் உறுப்புக்களையும் உடல் திரவங்களின் சமநிலையையும் பெரிதாக  பாதிக்ககூடியதாகும்.


பொதுவாக இத்தகைய மருந்துக்களை தயாரிக்க 1400 கிராம் மூலிகைகள் அரைத்து பொடியாக்கி சுமார் 200 கிராம் அளவிற்கு திடமாக்கப்படுகிறது. மூலிகை கலவையின் நீர் சத்து முழுவதும் உலரவைத்து வெளியேற்றப்படுவதால் அவற்றின் சத்துக்கள் இறுக்கப்பட்டு சிறிதளவு கொடுத்தாலே பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். 
பெரும்பாலான இடங்களில் தெரிந்தவர்கள், உறவுக்காரர்கள்,நண்பர்கள் மூலமாக உணவு பொருட்களுடன் சேர்த்தும், மாத்ரீகர்கள் குறிசொல்பவர்கள் மூலமாக பிரசாதம் என்ற பெயரிலும் கொடுக்கப்படுகின்றன. 90சதவீத தாவர நச்சுக்கள் மணமும் சுவையும் அற்றதாக இருப்பதால் உணவில் கலக்கும் போது எவ்வித மாற்றமும் தெரிவதில்லை. மருந்துக்கள் அனைத்தும் புடம் போடப்பட்டு சக்தியூட்டப்படுவதால் மிக குறைந்த அளவு கொடுத்தாலே தேவையான அளவு பாதிப்புகளை ஏற்படுத்த முடிகிறது.


அதுமட்டுமல்லாமல் இத்தகைய விஷ மருந்துக்கள் ஒரு முறை உடலுக்குள் செலுத்தப்பட்டால் சாதாரணமாக உட்கொள்ளும் சில  உணவுவகைளில் இருந்து தேவையான சக்தியை பெறுவதால் அதன் நச்சுதன்மை நீண்டநாட்களுக்கு உடலில் தேங்கி இருக்கும். உதாரணமாக தாவர நச்சுக்கள் உடலில் இருக்கும் போது பழைய உணவுகளை அதிகம் உட்கொண்டால் பழைய உணவுகளில் உள்ள பாஸில்லாய் என்ற பாக்டீரியாக்கள் நச்சுதன்மையை  அதிக படுத்தும். சேனைகிழங்கு, சேப்பங்கிழங்கு, புளி,கேசரிபருப்பு,மது,பழைய அசைவ உணவுகள், கருவாடு,வாத்து முட்டை, புளித்த உணவுகள் ஆகியவை உடலிலுள்ள நச்சு தன்மையை  நீங்காமல் இருக்க செய்யும் தன்மை கொண்டவை. இதனால்தான் ஒருமுறை கொடுக்கப்பட்ட விஷ உணவுகள் பல வருடங்கள் கூட பாதிப்புகளை தருகின்றன.

மிக சாமர்த்தியமாக வழக்கமான உணவுகளுடன் கலந்து கொடுக்கப்படும் இத்தகைய தாவர நச்சுக்கள் ஜீரணமாகி ரத்தத்தில் கலந்து உடல் திரவங்கள் எனப்படும் ஹார்மோன்கள் பெப்டைட்டுகள் மற்றும் என்சைம்களின் சரிவிகிதத்தையும் அடர்த்தியையும் பாதிக்கின்றன இதனால் மூளை மற்றும் நரம்பு செல்களின் இயக்கத்தில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. என்சைம்கள் பாதிக்கப்படுவதால்தான் விஷ போஜனம் எனப்படும் இத்தகைய பாதிப்புகள் இருப்பவர்கள் தீராத வயிற்றுவலி, பசியின்மை, வயிற்றில் குத்தல் , மலசிக்கல், எப்போதும் வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்வு ஆகிய பாதிப்புகள் இருப்பதாக சொல்கின்றனர்.

ஹார்மோன்கள், பெப்டைட்டுகள்,என்சைம்கள் எனப்படும் உடல் திரவங்கள் பாதிக்கப்படுவதால் வழக்கமாக செய்யப்படும் மருத்துவ பரிசோதனைகளால் உடலுக்குள் ஏற்பட்டிருக்கும் நச்சுபாதிப்புகளை பெரும்பாலும்  கண்டுபிடிக்க முடிவதில்லை. இதனால் தான் ஸ்கேன், எக்ஸ்ரே,லேப் டெஸ்ட், என்டோஸ்கோப் போன்ற சோதனைகளில் எந்த குறையும் தெரியாத போதும் உடல் உபாதை மட்டும் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. மருத்துவ பரிசோதனைகளால் தெரியாத பாதிப்புகளை  உடலில் மாற்றங்களைக்கொண்டு  அடையாளம் காணமுடியும். 
குறிப்பாக வியர்வையில்  கற்றாழை நாற்றம்..பாதத்தில் ஊறல், குத்தல் மற்றும் அரிப்பு..கணகளில் பூஞ்சை படிந்தாற்போன்ற வெண்மை படர்ந்திருப்பது...நாக்கில் வெடிப்புகள் ..... மூச்சுகாற்றில் வீச்சம் அல்லது புகை நாற்றம்..விரல் நகங்களில் வெடிப்பு..வயிற்றில் குத்தல்..மேல் வயிற்றில் பாரமாக இருப்பது...பசியின்மை..அடிக்கடி குமட்டல்... தொடர்ந்து மலசிக்கல் இருப்பது...உடல் வெளுத்து போதல்...சருமத்தில் வெடிப்புகள்...வேகமாக உடல் இளைத்தல்...விலாபகுதியில் வலி...
கைகால் நடுக்கம்...திடீர் திடீரென்று உடல் துடிப்பது... தூக்கத்தில் உடலை முறுக்குவது...அடிக்கடி உயரத்தில் இருந்து விழுவது போன்ற கனவு வருவது... காரணமற்ற மன அழுத்தம்... போன்றவை உடலில் விஷதன்மை இருப்பதற்கான சில அறிகுறிகளாகும்.

பொதுவாக நீண்ட நாட்களாக காரணம் கண்டுபிடிக்க முடியாத நோய் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் உடலில் நச்சுதன்மை இருக்கிறதா என்று அறிந்து கொள்வது நல்லது.அதே போல் நோய் ஏற்பட்டு அதற்கான காரனங்கள் பரிசோதனைகளிலும் ஆய்வக சோதனைகளிலும் தெரியாத போது உடலின் நச்சுதன்மையை சோதித்து கொள்வது நல்லது. 

பொதுவாக கொடுக்கப்பட்ட  நச்சுக்களுக்கு தக்கவாறு உடலில் பாதிப்புகள் இருக்கும்.  உதாரனமாக களஞ்சிக நஞ்சு என்பது தோல் நோய்களையும் சரும பாதிப்புகளையும் ஏற்படுத்தும்...
பாணிக்கம்ப நஞ்சு வாத பிரச்சனைகளையும் உடலில் காரணமற்ற வலிகளையும் ஏற்படுத்தும் ....
களு நஞ்சு சுரம், நுரையீரல் பாதிப்புகள், உடல் நடுக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும்..
சூலை நஞ்சு என்பது நகரும் வலிகள், உடல் செயல் இயக்கத்தை முடக்குவது ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும்... 
பஞ்சவ நஞ்சு ஈரல் நோய்களையும்...குன்ம நஞ்சு குடல் மற்றும் வயிற்று நோய்களையும் ஏற்படுத்தும்...
குதம்ப நஞ்சு நரம்பு மண்டலத்தையும் ஹார்மோன் சமசீரின்மையையும், 
மண்டூக நஞ்சு மூளை  மற்றும் மன பாதிப்புகளையும்  ஏற்படுத்தும்.


பொதுவாக இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துபவர்கள் இரண்டு அல்லது மூன்று வகையான நச்சு தாவரங்களை பயன்படுத்தி பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனர். சூலை நஞ்சு மற்றும் குதம்ப நஞ்சுள்ள தாவர கலவை  சேர்த்து கொடுக்கப்பட்டால்  பராலிஸிஸ் எனப்படும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. குதம்ப நஞ்சு மற்றும் மண்டூக நஞ்சு சேரும் போது கோமா எனப்படும் மூளைசாவு ஏற்படும். 
இத்தகைய நச்சுமருந்துக்களை தயாரிக்கும் முறைகள் பெரும்பாலும் வழிவழியாகவே கற்றுதரப்படுகின்றன. மாந்த்ரீகம், குறிசொல்வது,குரளி வித்தை  போன்ற செயல்களை செய்பவர்களே பெரும்பாலும் இதன் தயாரிப்பு முறைகளை தெரிந்தவர்களாக இருக்கின்றனர். ஒரு சில இடங்களில் சில ஆதிவாசிகள் இத்தகைய தயாரிப்பு முறைகளை  அறிந்திருக்கின்றனர். ஆனால் இதன் தயாரிப்பு ரகசியத்தை தங்களை சேர்ந்தவர்களை தவிர வேறு யாருக்கும் இவர்கள் கற்று தருவதில்லை.

உடல் பாதிப்புகள்.... .....
தாவர நஞ்சியலை (ஹெர்பல் டாக்ஸிகாலஜி) பொருத்தவரை நவீன கால அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முன்னரே கருவூர்சித்தர், புலிப்பாணி சித்தர், சரகர் போன்றவர்கள் நிறையவே சொல்லி இருக்கின்றனர். இதில் அஷ்ட சித்து எனப்படும்  களுநஞ்சு..களஞ்சிக நஞ்சு..பாணிக்கம்ப நஞ்சு சூலை நஞ்சு..பஞ்சவ நஞ்சு..குன்ம நஞ்சு..குதம்ப நஞ்சு..மண்டூக நஞ்சு என்ற எட்டு வகையான நஞ்சுகள் அதிகம் புழக்கத்தில் உள்ளன.

இவற்றில் களஞ்சிக நஞ்சு தோல் நோய்களையும், பாணிக்கம்ப நஞ்சு வாத நோய்களையும், களு நஞ்சு சுரம், அஸ்தி சுரம், விஷ சுரம் நுரையீரல் பாதிப்புகள் ஆகியவற்றையும், சூலை நஞ்சு  வலிகள், கட்டிகள், புண்கள் ஆகியவற்றையும், பஞ்சவ நஞ்சு குடல் மற்றும் ஜீரண உருப்புக்கள் தொடர்பான நோய்களையும்,குன்ம நஞ்சு ஈரல் நோய்கள், ரத்தம் தொடர்பான பாதிப்புகளையும், குதம்ப நஞ்சு நரம்பு நோய்கள்,வலிப்பு நோய், ஹார்மோன் பாதிப்புகள் ஆகியவற்றையும், மண்டூக நஞ்சு மூளை மற்றும் மனம் சார்ந்த பாதிப்புகளையும் உருவாக்கும்.

உதாரணமாக கேசரி பருப்பில் (பருப்புடன் கலப்படம் செய்வது)  பாணிக்கம்ப நஞ்சு சிறிதளவு உள்ளது.  தலைசுருளி, பொற்றிலை ஆகிய தாவரங்களிலும் இதே பணிக்கம்ப நஞ்சு அதிக அளவில் உள்ளது. கேசரி பருப்பை தொடர்ந்து பல வருடங்கள் உட்கொண்டாலோ தலைசுருளி, பொற்றிலை ஆகியவற்றை 30 கிராமுக்கு மேல் உட்கொண்டாலோ முடக்குவாதம், கைகால் செயலிழப்பு ,பக்கவாதம் ஆகியவை ஏற்படும்.
கேசரி பருப்பு கலப்படம் செய்த பருப்பு வகைகளை தொடர்ந்து உட் கொண்டால் முடக்கு வாதம் ஏற்படும் ஆங்கில மருத்துவ ஆய்வுகள் உறுதி படுத்தியிருக்கின்றன.

நீர் சிலும்பை, செங்கழுனீர், மயிர்பாசி ஆகியவற்றில் இருக்கும் பஞ்சவ நஞ்சு ஜீரண தொல்லைகளையும் எடை இழப்பு, பசியின்மை, வயிற்று உபாதைகள், நாள் பட்ட மலசிக்கல் ஆகியவற்றையும் ஏற்படுத்தும் இது ஆர்சணிக் என்ற ரசாயணத்திற்கு இணையானது.  

பெரும்பாலான குறிசொல்பவர்களால் காதல் வெற்றிக்காக கொடுக்கப்படும் வசிய மருந்தில் மதனகாம பூவுடன்  காட்டு கருவேல முள் பயன் படுத்தப்படுகிறது.இதிலுள்ள பஞ்சவ நஞ்சு  ஈரல் வீக்கத்தையும் பைல் பிக்மென்ட் எனப்படும் ஈரல் நிணநீரின் சம சீரின்மையையும் ஏற்படுத்தும்.

மன பாதிப்புகள்......
மன பாதிப்புகளை ஏற்படுத்துவதில் தாவர நச்சுக்கள் நீண்டகாலமாக மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. பேதலிக்க செய்தல் எனப்படும் மன உளைச்சல், மன சிதைவு முதல் உளவெறியூட்டல் அல்லது சித்தபிரமை எனப்படும் தீவிர பாதிப்புகள் வரையில் தாவர நச்சுக்களை பயன் படுத்தி ஏற்படுத்தப்படுகின்றன. ஹைப்பர் சென்ஸிடிவிடி எனப்படும் அதிகம் உணர்ச்சிவசப்படுவது, எப்போதும் இறுக்கத்துடன் மூட் அவுட்டாக இருக்கும்    யுனிபோலர் டிஸார்டர்  (முனி அடித்துவிட்டது என்பது), பக்கத்தில் ஆளே இல்லாமல் மனதுக்குள் குரல்கள் கேட்ட்க்கும் ஷிட்ஸோஃப்ரினியா  (ஏவல் வைத்திருப்பது என்பது), கட்டுபடுத்த முடியாமல் ஒரே எண்ணம் திரும்ப திரும்ப தோன்றும் அப்ஸஸிவ் கம்பல்ஸிவ் டிஸார்டர் (இதை தான் வசியம் என்கின்றனர்),  புத்தி பேதலித்து எந்த உணர்வும் இல்லமல் திக்குபிரமை பிடித்து நிற்கும்  டெம்போரல் லோப் எபிலப்ஸி, குறிப்பிட்ட சமயங்களில் வெறிபிடித்தாற் போல் செயல்படும் பை போலர் டிஸாடர் (பேய் பிடித்திருப்பது  அல்லது சாமி வந்திருப்பது என்பது)  இவை அனைத்தையும் நச்சுதன்மை வாய்ந்த தாவரங்களை கொண்டு ஏற்படுத்த முடியும்.

 பொதுவாக மனித மனத்தின்  அனைத்து இயக்கங்களையும் மூளை மற்றும் மூளைக்கு செல்லும் ஹார்மோன்கள் மற்றும் பெப்டைட்டுகளே நிர்வகிக்கின்றன தாவர நச்சுக்கள் இந்த உடல் திரவங்களில் சமசீரின்மையை ஏற்படுத்தி அதன் சரிவிகித தன்மையை குலைத்து விடுகின்றன இதனால் மூளையின் செயல்பாடும் மனத்தின் இயக்கமும் நிலைகுலைந்து போகிறது.

சீமை காடைகண்ணி, குழிமொட்டு (டெட்லி நைட் ஷேட்) ஆகியவற்றில் உள்ள மண்டூக நஞ்சு  (அட்ரோப்பின் எனப்படும் ரசாயனத்திற்கு இணையானது)  தீவிர எண்ணம், ஞாயபக மறதி, தூக்கமின்மை, மன அழுத்தம்,தற்கொலை எண்னம் ஆகியவற்றை ஏற்படுத்தும். மரக்குறும்பை, பட்டு கூம்பல், நீரட்டி முத்து இலை ஆகியவற்றின் நச்சுதன்மை புத்தியை பேதலிக்க செய்யும் இது அபினில் உள்ள மோஃபின் ரசாயணத்துக்கு இணையாணது.  

கஞ்சாசெடியில் உள்ள THCC  (Tetrahy drocannabinol)  நச்சு தன்மை ஒருகுறிப்பிட்ட சிந்தனையை மீண்டும் மீண்டும் ஏற்படுத்தும் வசியம் செய்பவர்கள் சொக்குப்பொடி எனப்படும் வசிய மருந்தில் சிவாகை எனப்படும்  கஞ்சாவை கலப்பதற்கு இதுவே காரணம். காசி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள சாமியார்கள் (?) கஞ்சா புகைப்பதற்கு அவர்கள் விரும்பும் கடவுள் (?) சிந்தனை எண்னத்தில் நிலையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

சமீப காலமாக காதல் விவகாரங்கள்....தொழில் தகராறுகள்.... மேலதிகாரிகளின் கெடுபிடி....அரசியல் போட்டிகள்....உறவு பிரச்சனைகள் அலுவலக சிக்கல்கள்ஆகியவற்றை தீர்க்க சாமியார்களையும், குறி சொல்பவர்களையும், சாமியாடுபவர்கலையும் தேடிப்போவது அதிகமாகிவிட்டது. இவர்கள் பெரும்பாலும் மருந்து என்ற பெயரில் இத்தகைய தாவர விஷங்களை கொடுத்து உண்பவருக்கு தெரியாமல் அவர்களின் உணவில கலந்து கொடுக்க சொல்கின்றனர். 

இவ்வாறு கொடுக்கப்படும் மருந்துக்கள் ஜீரணமாகி ரத்தத்திலும் உடல்திரவங்களிலும் கலந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

சில வகை தாவர நச்சுக்கள் உடலுறவின் மூலம் பரவக்கூடியதாகவும் இருக்கின்றன.குறிப்பாக பஞ்சவ நஞ்சு எனப்படும் 2ம் நிலை விஷங்கள் உட்கொள்பவரின் ஈரல் மற்றும் பைல் பிக்மெண்ட்ஸ் எனப்படும் நிணநீரில் நச்சு தன்மையை ஏற்படுத்துகின்றன. இது உடல் உறவின் மூலம் பரவக்கூடியது. குறிப்பாக இத்தகைய விஷங்கள் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் மூலம் மிக எளிதாக அவர்களோடு உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கும் பரவும்.ஆரம்பத்தில் பசியின்மை, வாய்கசப்பு, மேல் வயிற்றில் வீக்கம், அஜீரணம், ஜீரண அமிலம் மேல் நோக்கி வருவது போன்றவற்றில் துவங்கி ஈரல் வீக்கம், மஞ்சள் காமாலை வரை பாதிப்புகளை ஏற்படுத்தும்.

தீர்வுகள்.....

இடுமருந்து மூலமாக பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் உடலில் தங்கியிருக்கும் நச்சுக்களை நீக்குவதே முறையான தீர்வாகும். பூஜைகள், வழிபாடுகள், யந்திரங்கள் ஆகியவற்றின் மூலமாக உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவே முடியாது. அதேபோல மருந்து எடுப்பதாக சொல்லிக்கொண்டு குழல் வைத்து ஊதுவது, வாந்தி எடுக்க செய்வது போன்றவை சாத்தியம் இல்லை. ரத்தத்தில் கலந்துள்ள விஷதன்மையை இதை போன்ற வித்தைகளால் நீக்க முடியாது. 

சில இடங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் எந்த வித ந்ச்சுக்களும் இருக்காது ஆனால் யாரோ மருந்து வைத்துவிட்டதாக பயம் இருக்கும் இந்த உளவியல் காரணத்தால் (சைகலாஜிகல் பிரஷர்) உடலில் நோய் இருப்பதாகவும் நோய்க்கான எல்லா உபாதைகளும் இருப்பதாகவும்  தோன்றும் இது ஹைப்போ காண்ட்ரியா எனப்படும். இவர்கள் மருந்து எடுப்பதாக போய் குழல் வைத்து ஊதினாலோ வாந்தி எடுக்க மருந்து சாப்பிட்டாலோ அவர்களுக்கு ஏற்படும் திருப்தியால் பாதிப்புகள் தீர்ந்துவிடும். இது முழுக்கமுழுக்க சைகிக் டிஸார்டர் எனப்படும் ஆழ்மன பாதிப்பு மட்டுமே.

இடுமருந்து பாதிப்பு இருப்பவர்கள் முதலில் தங்களுக்கு உண்மையிலேயே உடலில் நச்சுத்தன்மை இருக்கிறதா என்று உமிழ் நீர் சோதனை மற்றும் ரத்த சோதனை மூலம் தெரிந்து கொள்ள வேண்டும.
அதன் பின்னர்  முதலில் உடலில் தங்கியுள்ள நச்சுதன்மையிய நீக்கும் ஆண்டி டாக்ஸின் மருந்துக்களும். அடுத்து ரத்தம் மற்றும் உடல் திரவங்களை வலுபடுத்தும் மருந்துக்களும் அடுத்ததாக பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை வலுபடுத்தும் மருந்துகள் என்று மூன்று கட்டமாக மருந்துக்களை உட்கொள்ள வேண்டும்.

இந்த மூன்று கட்ட மருந்துக்களும் ஒரே  சமய்த்தில் உட்கொள்லலாம்.
இடுமருந்து எனப்படும் தாவர நச்சுக்கள் கொடுக்கப்பட்டிருந்தால் அதை பாரம்பர்ய பிரம்ம சூக்த சோதனையால் கண்டுபிடிக்க முடியும்.
காலை எழுந்தவுடன் முதல் வேலையாக (பல் துலக்காமல்...மலஜலம் கழிக்காமல்) 5 முதல் 10 கிராம் பட்டை தீட்டப்படாத அரிசியை வாயில் போட்டு 5 நிமிடம் வைத்திருந்து அதை காற்று புகாத பாலிதீன் கவரில் பேக் செய்யவும். பின்பு வலது கை மோதிர விரலில் இருந்து 7 முதல் 10 சொட்டு ரத்தம் எடுத்து(சாதரண குண்டூசியில் குத்தினாலே ரத்தம் வரும்) அதையும் ஓரு பாலிதீன் கவரில் வைத்து இரண்டையும் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பினால் அவற்றை சோதித்து  தாவர நச்சுக்கள் உள்ளனவா என்றுஉறுதி செய்து கொள்ளலாம்.
பரிசோதனை கட்டணம் ரூ.500.00 ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கு .... .... .....

Dr.G. MUKUNDHAN. BMHS,DYNT,

MUDHASHANA HERBAL RESEARCH FOUNDETION.
19/2 Rose Park Avenue, Sami chetti Palayam. Coimbatire.47
SUBIKSHA  HERBAL CLINIC AND MIND CARE CENTER
102Maruthy Complex, Perianaiken Palayam, Coimbatore.20.

Phone. 94435 60393    .........    8098409001
emai. jeevakalalayam @ gmail.com.











 பொதுவாக செய்வினை வசியம் என்பது இரண்டு வழிகளில்                     பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
ஒன்று  தொடர்ச்சியான உடல் பாதிப்புகளை ஏற்படுத்தி இயல்பாக செயல்         படவிடாமல் தடுப்பது. மற்றது காரணமற்ற மன பாதிப்புகளை                 ஏற்படுத்துவது.
இந்த இரண்டு முறைகளிலுமே விஷதன்மை வாய்ந்த மூலிகைகள் அடிப்படை காரணிகளாக பயன்படுத்தப்படுகின்றன.

இரண்டு பதிப்புகளுக்கும் தீர்வு என்று வரும் போது பாதிக்கப்பட்டவரின் ஒத்துழைப்போடும் அல்லது அவருக்கு தெரிந்து அவரின் சம்மதத்தோடும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் மிக சுலபமாக மாற்று மருந்துக்களை கொடுத்து உடலில் படிந்திருக்கும் நச்சு படிமங்களை நீக்கி விடலாம்.

ஆனால்,பல சந்தர்ப்பங்களில் பாதிக்கபட்டவர்களுக்கு தெரியாமல் அல்லது பாதிக்கப்பட்டவரின் ஒப்புதல் இல்லாமல் தீர்வுகளை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இன்னும் சில சமயங்களில் பாதிக்கப்பட்டவர் அருகில் இல்லாதபோது அவரின் மன பாதிப்புகளை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் அத்தகைய சந்தர்ப்பங்களில் ப்ரோ ஹிப்னோதெரபியுடன் தொடர்புடைய விபுதசங்கல்பம் என்ற முறையை பயன் படுத்தி வெற்றி காணலாம்.
இந்த முறையில் மன பாதிப்புகள்.. மன மாற்றங்கள்..மன சிதைவுகள் இவற்றை மிக சரியாக தீர்க்கமுடியும். குறிப்பாக வசியத்தினால்  மனம் பாதிக்கப்பட்டவர்களை இந்த பிரயோகத்தால்  குணப்படுத்தமுடியும்.



                                 

விபுத சங்கல்பம் என்பது மேக்டோரைஸ் டெலிபதி எனப்படும் .டெலிபதி என்பது மனோமய உத்திரவு எனப்படுகிறது.
ஓரிடத்தில் இருப்பவர் மற்றொரு இடத்தில் இருப்பவருக்கு தன் ஆழ்மனதின் மூலமாக உத்திரவுகள் அல்லது தகவல்களை செலுத்துவது டெலிபதி எனப்படும். இந்த முறை ரெய்க்கி எனப்படும் ஜப்பானிய மாற்றுமருத்துவத்தில் மிக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.ரெய்க்கியில்  டிஸ்டன்ட் ஹீலிங்க் எனப்படும் தொலைநிலை மருத்துவத்தில் தேர்ட் ஐ டியூனிங்க்  முறையில்  டெலிபதி மூலம் உத்தரவுகள் செலுத்துவது வழக்கம்.

 கடந்த 1996ம் ஆண்டு  எமிலி ரௌஸா என்ற பெண் தனது ஆழ்மன ஆற்றலை செலுத்தி தூரத்தில் இருப்பவர்களின் மன பதிப்புகளை குணப்படுத்தி நிரூபித்திருக்கிறார் இது  PBSன் Scientific American Frontiers  என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது.

அதே போல 1924ல் ஜெர்மானிய மனோதத்துவ  நிபுனர்  ஹேன்ஸ் பெர்கர்  டெலிபதி மூலம்  செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியும் என்பதை உறுதி செய்தார்.



                                    



சீன மருத்துவத்தில் ரெய்க்கி பயன்படுத்தப்படுவதை போல பாரம்பர்ய இந்திய மருத்துவத்தில் வர்ம கலை மூலம் இந்த வித்தைகள் பெரிதும் பயன்படுத்தப்படுள்ளன.  கையால் தொட முடியாத சூழ்நிலையிலும் பார்வையால் நெருங்க முடியாத சூழ்நிலையிலும் பிராண சக்தியை செலுத்தி ஒருவரின் மன இயக்கத்தை கட்டு படுத்துவது அல்லது திசை திருப்புவது என்பது மெய்தீண்டா கால வர்மம் என்ற  கலையின் மூலம் சாத்தியமாகி இருக்கிறது. இதை பதிணென் சித்தர்களில் போகர் தன் வர்ம சூத்திரத்திலும்..தன்வந்த்ரி வர்ம சஞ்சீவனியிலும்..தெளிவு படுத்தி இருக்கின்றனர்.

எனவே நவீன உளவியல் மருத்துவத்தில் சொல்லப்படும் ப்ரோ ஹிப்னோ தெரபியும்..சீன மருத்துவத்தில் சொல்லப்படும் ரெய்க்கியும் இந்திய பார்ம்பர்ய மருத்துவத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டவைகளே.

பெரும்பாலும் வசியம் எனப்படும் மனமாறுதலுக்கு ஆளானவர்கள் வேறு ஒருவரின் எண்ண அலைகளின் (THOUGHT WAVES) ஆதிக்கத்திற்கு கட்டுபட்டு இருப்பார்கள். அதனால் தான் வசியம் செய்தவர்களை பார்த்தாலோ அவர்களின் குரலை கேட்டாலோ பாதிக்கப்பட்டவர்களுக்கு இனம் புரியாது பயமும் பதட்டமும் ஏற்படுகிறது. அத்தகைய ஆதிக்க எண்ணத்தை  அவர்களின்  ஆழ்மனதில் இருந்து நீக்கி விட்டால் அவர்கள் பழைய நிலைக்கு திரும்பி விடுவது உறுதி.


                                            







வசியம் என்பது  மூன்று வழிகளில் செயல் படுத்தப்படுகிறது.ஒன்று ஒரு குறிப்பிட்ட நபரை பற்றிய எண்ணம் அல்லது தாக்கம் கட்டுப்படுத்த முடியாமல் மீண்டும் மீண்டும் ஏற்படுவது. இது ஆக்கிரமனம் எனப்படும்.இது உளவியல் மருத்துவத்தில் சொல்லப்படும் அப்ஸஸிவ் கம்பல்ஸிவ் டிஸார்டர் என்ற மன பாதிப்போடு தொடர்புடையது. இந்த பதிப்பு ஏற்பட்டால் எத்தனை பேர் தடுத்தாலும் எவ்வளவு தடைகள் வந்தாலும் தன் எண்ணத்தில் இருக்கும் நபரை பற்றிய சிந்தனை திரும்ப திரும்ப ஏற்படுவதை தடை செய்ய முடியாது.

 இரெண்டாவது  பதிப்பு ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது உறவை மறக்க செய்வது.  இது நிதேதயம் எனப்படுவது.இது உளவியலில் சொல்லப்படும்  செலக்டிவ் அம்னீஷியா எனப்படும் மன பதிப்போடு தொடர்புடையது. அன்போடு இருக்கும் கணவன் திடீரென்று மனைவியை புறக்கணிப்பதும், குடும்ப வாழ்வின் இனிமையான சந்தர்ப்பங்களை முற்றிலும் மறந்து போவதும், பாசமாக இருந்த நபர் திடீரென்று மிகுந்த வெறுப்புடன் நடந்து கொள்வதும் . இந்த பாதிப்பின் விளைவுகள்.

மூன்றவதாக ஒரு குறிப்பிட்ட நபரின் உத்தரவு அல்லது பார்வைக்கு கட்டுப்படுவது மசஜ்வதம் எனப்படும்  இது உளவியலில் சொல்லப்படும் கண்டிஷனல் ரிஃப்ளக்ஸ் என்ற நிலையோடு தொடர்புடையது. மற்ற சமயங்களில் சாதாரணமாக இருப்பவர் ஒரு குறிப்பிட்ட நபரை பார்த்தவுடன் அல்லது அவருடைய குரலை கேட்டவுடன் இனம் புரியாத பயத்துடன் தன் சுயகட்டு பாட்டை இழந்து அவரின் விருப்பத்துக்கு தகுந்தாற்போல் நடந்து கொள்வது   இதன் முக்கிய பாதிப்பு.

இவை அனைத்துமே வசியம் என்ற பெயரில் விஷ தன்மை கொண்ட மூலிகைகளைக்கொண்டு செயற்க்கையாக ஏற்படுத்தப்படும் பாதிப்புகளாகும். புலிப்பாணி ஜால திரட்டு,  சிதம்பர அஷ்ட்ட கர்மம், தாந்த்ரீக ரக்ஷ சாஸ்த்திரம், யட்சிணி உபகர்மம், மலையாள மாந்த்ரீக சேகரம் ஆகிய நூல்களில் வசிய மருந்து அல்லது சொக்குபொடி என்ற பெயரில் இத்தகைய  மருந்துகளை தயாரிக்கும் முறைகள்  சொல்லப்பட்டிருக்கின்றன.

முதலில் இத்தகைய பாதிப்புகள் அனைத்தும் விஷத்தன்மை வாய்ந்த மூலிகைகளால் ஏற்படுத்தப்படும் மூளை மற்றும் மன பாதிப்புகள் என்ற மறுக்க முடியாத உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும். இதில் மந்திரமோ, அமானுஷ்யமோ, ஆன்மீகமோ, தெய்வசக்தியோ எதுவும் இல்லை.இவை அனைத்தும் சாதாரண உடல் மற்றும் மன பாதிப்புகளே.மனிதனின் அனைத்து உணர்வுகளுக்கும் காரணமான ஹார்மோன்கள் எனப்படும் உடல்திரவங்களில் ஏற்படும் மாற்றங்களே காரணம்.




மாந்த்ரீகம் என்ற பெயரிலும்  செய்வினை என்ற பெயரிலும் வசியம் செய்வதாக சொல்லப்படும் எல்லா முயற்சிகளும் மனதை மாற்றும் மூலிகைகளை மருந்தாக கொடுக்கப்படுவதால் மட்டுமே ஏற்படுகிறது. தாயாரிக்கின்ற மருந்தை உட்கொள்ள கொடுக்கும் வாய்ப்பு உள்ளவர்களை மட்டுமே இவர்களால் வசியம் செய்யமுடியும்.கோடி ரூபாய் கொடுத்தாலும் ஹாலி வுட்  ஹாலிவுட் பாலிவு ட் நடிகைகளையும், சர்வதேச விளையாட்டு வீராங்கனைகளையும் சாதாரன குப்பனுக்கும் சுப்பானுக்கும் வசியம் செய்து கொடுக்க முடியாது. காரணம் சானியாமிர்சாவும், காத்ரீனா கைப்பும், ஷரன் ஸ்டோனும் இவர்கள் கொடுக்கும் மருந்து கலந்த உணவை உட்கொள்ள மாட்டார்கள் என்பதுதான்.

பெரும்பாலும் ஒருவரை வசியம் செய்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முயற்சிகும்போது மூளையின் செயல் இயக்கத்தை பாதிக்கும் மருந்துகளை கொடுத்துவிட்டு யாருக்காக வசியம் செய்யப்படுகிறதோ அவர்களை பற்றிய எண்ணம் அல்லது சிந்தனை வசியம் செய்யப்படுபவரின் ஆழ்மனதில் அழுத்தமாக பதிவைக்கபடுகிறது.இது கிட்டதட்ட மூளை சலவை செய்யும் வித்தை.



தொடர்ந்து இந்த ஒலிவீச்சுக்கள் உச்சரிக்கப்படும் போது பாதிக்கப்பட்டவரின் ஆழ்மனதை தாக்கி ஏற்கனவே பதிவாகி இருக்கும் மாற்று எண்ணங்களை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கிவிடும்.  இதனால் எதிர்மறை பிரயோகங்களால் பாதிக்கப்படும் முன்பு அவர் இருந்த தெளிவான மன நிலைக்கு அவர் மீண்டு வருவார்.
அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி பகைவர்களின் மனதை மாற்ற வாழ்த்து சொல்லுங்கள் என்று சொல்லுவார்....ஓஷோ உங்கள் விருப்பங்கள் நிறைவேற எண்ணத்தை  (தாட்) செலுத்துங்கள் என்று சொல்லுவார்...அரவிந்தரோ ஒரு படி மேலே போய்  மாற்றங்களை ஏற்படுத்த எண்ணத்தை குவித்து உங்கள் கட்டளையை செலுத்துங்கள் என்கிறார். இவை அனைத்தும் டெலிபதி மூலம் ஒருவர் மனதை மாற்றம் முயற்சிகளே.


விபுத சங்கல்ப முறையால் பாதிக்கப்பட்டவரின் ஆழ்மனதில் பதிந்திருக்கும் ஒவ்வாத எண்ணங்கள் வெளியிலிருந்து செலுத்தப்படும் நல்ல எண்ணங்களால்   டெலிபதி மூலம் நீக்கப்படுகிறது. இத்தகைய  பாதிப்புகளை நீக்க அதற்கென ஆலோசகர்களோ..மருத்துவர்களோ அல்லது பயிற்சியாளர்களோ தேவையில்லை.இத்தகைய பாதிப்பு இருப்பவர்களின் ரத்த உறவு உள்ள யார் வேண்டுமானாலும் இந்த முறையை பிரயோகிக்கலாம். மற்றவர்கள் பிரயோகிப்பதை விட ரத்த உறவு இருப்பவர்கள்  மற்றும் கணவன் மனைவிக்குள் பிரயோகிப்பது அதிக பலனை தரும்.  காரணம் ரத்த உறவு உள்ளவர்களின் ஆழ்மனங்களுக்கிடையே  பலமான மன இணைப்பும் மரபுவழி இணைப்பும் இருக்கும்.கணவன் மனைவிக்கிடையே ஆத்ம பந்தம் எனப்படும் மன இணைப்பு இருக்கும் இதனால் அவர்களின் ஆழ்மன இயக்கத்தின் அதிர்வலைகளும் (FREQUENCY) கிட்டதட்ட ஒரே அலைவரிசையில் இருக்கும். எனவே ஆழ்மனதை ஊடுருவது எளிதாக இருக்கும்.


பொதுவாக  விபுத சங்கல்ப்பத்தில் பயிற்சியும் பழக்கமும் இல்லாதவர்கள் இந்த முறையை பின்பற்ற விபுத சங்கல்ப பீடம் பயன் படுத்தப்படுகிறது. பிராண சக்தியை அதிகபடுத்தும் ஆன்மீக அறிவியல் பொருட்களை இணைத்து தயாரிக்கப்படும் இந்த பீடங்கள் எண்ண அலைகளை செலுத்துபவர்களின் மன மொழி உத்திரவின் சக்தியை அதிகபடுத்தும் தன்மையுடையவை.
ஸ்படிக கற்கள்..அஷ்டாங்க மூலிகைகள்...பிராண சக்தி அதிகமுள்ள வேர்கள்....ரசமணி..... போன்ற பிராணகாந்த அலைகள் அதிகமுள்ள பொருட்களை இணைத்து விபுத சங்கல்ப்ப பீடங்கள் தயாரிக்கப்படுகின்றன.

விபுத சங்கல்ப்ப பீடங்கள் ஒலியலைகளை பலமடங்கு அதிகபடுத்தி ஒரு குறிப்பிட்ட மையத்தில் குவிக்கும் தன்மையுடையவை. பூதகண்ணாடி வழியாக சூரிய வெளிச்சத்தை (ஒளி அலைகள்) குவித்து காய்ந்த இலைகளையும் காகிதத்தையும் எரிப்பதை போல  மந்திரங்கள் எனப்படும் ஒலி அலைகளை குறிப்பிட்ட மையத்தில் குவிக்கும் வகையில் விபுத சங்கல்ப பீடங்கள் தயாரிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்டவரின் கிரக அமைப்புகள் ..நாடி அமைப்பு....பஞ்ச பூத ஆதிக்கம்...இவற்றின் அதிர்வலைகளுக்கு தகுந்த ஒலிகளை அவரின் ஆழ்மனத்திற்குள் ஊடுறுவும் வகையில் சங்கேத உத்திரவுகளாக  சொல்லித்தரப்படுகின்றன. இந்த உத்திரவுகள் நபருக்கு நபரரமாறுபடும்.இந்த உத்திரவுகளோடு இனைந்து பாதிக்கப்பட்டவரின் ஆழ்மன இயக்கத்தின் அதிர்வலைகளை ஊடுறுவும் ஒலிவீச்சுக்கள் குறிப்பிட்ட ஸ்தாதியில் (ஸ்கேல்) உச்சரிக்கும் படி சொல்லித்தரப்படும்.

 இவற்றை முறையாக உச்சரிக்கும் போது அந்த ஒலி அலைகள் (SOUND WAVES) பாதிக்கப்பட்டவரின்   ஜீவகாந்த சுற்று பாதையில் (ENERGY FIELD) நுழைந்து
 பலமடங்காக பல்கிபெருகி அழுத்தமான  நிலைஎண்ணமாக  (STATIC THOUGHT) ஆழ்மனதில் பதிந்துவிடும்.இதனால் மனஅளவில் ஏற்பட்டிருக்கும்  தற்காலிக மாற்றங்கள் (PSYCHOLOGICAL EFFECTS) நீங்கி உண்மையான இயற்கையான எண்ணங்கள் மட்டுமே இருக்கும்.


பொதுவாக பாதிப்புகள் ஏற்பட்டவுடன் எவ்வளவு விரைவில் அதை தீர்ப்பதற்கான முயர்சிகள் எடுக்க வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். காலம் அதிகமாக அதிகமாக
பாதிக்கப்பட்டவரின்  மனதில் பதிந்திருக்கும் எதிர்மறை எண்ணங்களின் அழுத்தம் அதிகமாவதால் அவற்றை நீக்கும் முயற்சிகள் கடினமாகும்.





ஆலோசனை மற்றும் விளக்கங்களுக்கு..
Dr.G.முகுந்தன். BMHS.DYNT,
சக்தி மூலிகை மருத்துவ மையம்
102. மாருதி காம்ப்ளக்ஸ்
பெரியநாயக்கன் பாளயம்,
கோயமுத்தூர். 20
9443560399.....8056503937












































9 comments:

  1. மிகவும் அருமையான, அரிதான விளக்கம் ஐயா, நன்றிகள்

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. Thriuchangode only 800 rs easy remived

    ReplyDelete
    Replies
    1. Your phone number pls send me 9884815015

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. தங்கள் அலைபேசி எண்ணை தெரிவிக்கவும்.

      Delete
    4. Mobile number please.send to 9865477706

      Delete
  4. Casino Vip - Hotel Reviews - Mapyro
    Casino Vip is located 경산 출장샵 in Marlborough, Essex, with 5 restaurants on site. The hotel 고양 출장샵 is connected 광주 출장마사지 to a number of 천안 출장마사지 other hotel sites, including 제주 출장마사지 Harrah's.

    ReplyDelete